📢 அறிமுகம்
2021 ஆம் ஆண்டு தொடங்கி, தற்போது ஆறாம் ஆண்டில் (2026–2027) தொடர்ந்து பயணித்து வரும் "இணையவழிக் கல்வி வானொலி (Online KalviRadio www.kalviradio.com)" என்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வக் கூட்டு முயற்சியில் ஆரம்பத்தில் மாணவர்களின் குரல் பதிவு (Audio Recording) செயல்பாடுகளை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்ததோம்.
கடந்த ஆறு ஆண்டுகளில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் கல்வி ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன், மாணவர்களின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு பல்வேறு கல்விசார் முன்னெடுப்புகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுத்தினோம்.
📢 பயணம்
அந்தவகையில்
இதுவரை வாசித்தல்,குரல் பதிவு செய்தல், எழுதுதல், வரைதல், வண்ணம் தீட்டுதல், எளிய படைப்புகளை உருவாக்குதல் போன்றவைகளையும் ,
தற்போது கற்றல்–கற்பித்தல் வளங்களை உருவாக்குதல், மாணவர்களுக்கு பயிற்சி தாள்கள் & டிஜிட்டல் வளங்களை உருவாக்குதல், ஆசிரியர்களுக்கான Dashboard வசதி உள்ளிட்ட பல்வேறு தன்னார்வக் கல்விச் செயல்பாடுகள் தொடர்ந்து முன்னெடுத்துவருகிறோம்.
இதனை பிரதிபலிக்கும் வகையிலும், நமது செயல்பாடுகளின் விரிவான பரிமாணத்தை வெளிப்படுத்தும் வகையிலும்,
இனி [2026 ஜூலை 15 - கல்வி வளர்ச்சி நாள் முதல்]
நமது தன்னார்வக் கூட்டு முயற்சியின் அனைத்து கல்விசார் முன்னெடுப்புகளும்,
KR Team (KamaRajar Tech Team)
என்ற ஒருங்கிணைந்த பெயரால் செயல்பட்டு பகிரப்படும்.
📢 நோக்கம்
மாணவர்களுக்கான தன்னார்வக் கல்விச் செயல்பாடுகள் மூலம் கல்வி மேம்பாட்டை ஏற்படுத்துவதும், ஆசிரியர்களின் தன்னார்வப் பங்களிப்பு மற்றும் கல்விச் சேவையை ஒருங்கிணைப்பதும் என்ற நமது அடிப்படை நோக்கமும் பயணமும் என்றும் மாறாமல் தொடரும்.
தொடர்ந்து தங்களின் அன்பும், ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும் என நம்புகிறோம்.
📢 கூட்டு முயற்சி
மாணவர்களை தன்னார்வக் கல்விச் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதற்காக,
ஆசிரியர்களுக்காக ஆசிரியர்களால், சேவை மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்ட
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வக் கூட்டு முயற்சி இது.
KR Team (KamaRajar Tech Team)
www.krteam.org
The Next Evolution of Online KalviRadio Team
The Unified Identity for All Our Educational Initiatives
Any doubt Contact
7904163487
[6PM to 9 PM]
உருவாக்கம் & ஒருங்கிணைப்பு
நல்லாசிரியர் ஆ.கார்த்திக்ராஜா
புவனகிரி, கடலூர் மாவட்டம்